குரு பெயர்ச்சி ; உங்க ராசிக்கு என்ன பலன்
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் திகதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இந்நிலையில் குரு பகவானின் பயணம் மற்றும் பார்வையால் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

கடகம்
சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் அதிசாரமாக, இரண்டாம் வீடான பணம், கண்கள், வாக்கு ஸ்தானத்திற்கு வருகிறார். குரு தன ஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடக ராசிக்கு குரு யோகாதிபதி. எனவே குருவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் கவலை வேண்டாம் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். வாக்கு ஸ்தானத்தில் குரு பயணிப்பதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். திருமணம் சுபகாரிய புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலைக்காக செல்லும் வெளிநாட்டு பயணங்கள் ஆதாயத்தை தரும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உங்க ஜென்ம ராசிக்கு வந்து அதிசாரமாக பயணம் செய்யப்போகிறார். 'ஜென்ம ராமர் வனத்திலே' என்று பாடல் உள்ளது. ஜென்ம ராசியில் குரு வரும் பொழுது புது முயற்சிகள் கைகூடும். நீங்கள் தொட்டது துலங்கும். இதுநாள் வரைக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். ஜென்ம ராசிக்குள் குரு வந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் 12 ஆம் வீடான விரையம், மோட்ச ஸ்தானத்திற்கு வருகிறார். வேலைச் சுமையால் உறக்கம் கெடும் என்பதால் கவனம் தேவை. குருவின் பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தின் மீது விழுகிறது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி, வாகனம் மாற்றம் வரும். பழைய வீட்டினை விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்டக் கூடிய வாய்ப்பு வரும்.
