சிறைச்சாலை உணவு தொடர்பில் ரஞ்சன் விடுத்த கோரிக்கை!
சிறைச்சாலையிலிருந்து வெளிவந்ததற்க்கு பின் அங்கு நடப்பவை குறித்து கருத்து தெரிவிக்கவும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் நான் விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறைச்சாலைகளுக்கு மீன், இறைச்சி உள்ளிட்ட பல உணவு பொருட்களை விநியோகிக்கும் நபர்களுக்கு நீண்ட நாட்களாக இலங்கை அரசாங்கம் பணம் செலுத்தாததால் விநியோகஸ்தர்கள் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.
அரசாங்க ஊழியர்களில் மிகவும் குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்பவர்கள் சிறைச்சாலையில் உள்ள அதிகாரிகள் இவ்வாறான சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை கைதிகளை தாக்குவதன் ஊடாக விடுவித்துக் கொள்கிறார்கள்.
இந்த சூழ்நிலையை மாற்ற சிறைச்சாலைகளுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு வெளியில் இருக்கும் செல்வந்தர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் சிறைச்சாலைகளில் உணவு பற்றாக்குறையை தீர்க்க முடியும். சிறைச்சாலைகளில் பணிபுரிவோருக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.
இதேவேளை, கைதிகளின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்" என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.