ரஞ்சனுக்கு ஒருவாரத்திற்கு விடுதலை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒருவார விடுமுறை என்ற அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதியமைச்சர் அலிசப்ரி இன்று பகல் வெலிக்கடை சிறைக்கு விஜயம் செய்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகள் சிலரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்குப் பேசிய அமைச்சர், நன்னடத்தை அடிப்படையில் உள்ள கைதிகள் சிலரை இனங்கண்டு ஒருவாரத்திற்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்திருக்கும் வகையில் விடுதலை செய்வது பற்றி ஆலோசனை நடத்திவருவதாக கூறினார்.
அத்துடன் விரைவில் இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இந்நிலையில் முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைக்கலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.