ரணிலின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு கிடைத்துள்ள வாய்ப்பு
அரசமைப்பில் கவனிக்காமல் விடப்பட்ட சிறிய தவறு ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தையும் நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தையும் மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்ககூடிய வாய்ப்பை வழங்கியுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த இணையத்தள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“2015 இல் 19ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் கவனம் செலுத்தப்படாமலிருந்த அரசியல் அமைப்பின் ஒரு தவறினை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தினை நீடிக்க கூடும்.

10 வருடங்களுக்கு முன்னர் சிறுமியொருவரை தகாத முறைக்கு உட்படுத்தியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஜனநாயக சீர்திருத்தங்கள்
19ஆவது திருத்தம் ஜனநாயக சீர்திருத்தங்களை உறுதி செய்யவும், நல்லாட்சியை உறுதிசெய்யவும் நாடாளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை ஐந்தாக குறைக்கவும் முயன்றது.
எனினும் பதவிக்காலம் தொடர்பான நிலைத்தன்மை உறுதிசெய்வதை அது புறக்கணித்தது.
19ஆவது திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்றத்தினதும், ஜனாதிபதியினதும் ஆறு வருட பதவிக்காலம் பற்றிய அனைத்து குறிப்புகளும் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டாலும் உறுப்புரை 83(டி) கவனிக்கப்படாமலும் மாற்றப்படாமலும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கானவாய்ப்பினை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான எந்தவொரு சட்டமூலத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற வேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்பு
எவ்வாறாயினும் பிரிவு 83(டி) இன் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஐந்து (5) ஆண்டுகளுக்கு அல்லாமல் ஆறு (6) ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே அது தேவைப்படும்.
இதன் பொருள் விக்ரமசிங்க அரசியலமைப்பை மீறாமல் தனது சொந்த மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை 11 மாதங்கள் மற்றும் 29 நாட்களுக்கு நீட்டிக்க முடியும்.
விக்ரமசிங்கவுக்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாடு தயாராக இல்லை.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்களுடன் இதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரணில் தரப்பானது தேர்தல் நடைபெறும் என திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் மேற்படி சட்ட திருத்தத்தின் படி அரசாங்கம் செயற்படாது எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |