ரணிலுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆளும் கட்சி திட்டவட்டம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ரணிலுக்கு அப்பதவியை வழங்குவதற்கு எமது கட்சி தயார் இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின்பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கட்சியின் சார்பில் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்தப்பதவியில் நீடிப்பார் எனவும், எல்லா விதத்திலும் தகுதியான ஒருவர் இருக்கும்போது மாற்றீடு தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் அதற்கான அவசியமும் எழவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியதுடன், தேசிய அரசு நிறுவப்படும் என வெளியான தகவலையும் மொட்டு கட்சி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ரணிலுக்காக காத்திருக்கும் ஆசனம்! துறக்கிறார் மஹிந்த