ரணிலுக்காக காத்திருக்கும் ஆசனம்! துறக்கிறார் மஹிந்த
ஏற்கனவே பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், விரைவில் அந்த மாற்றம் நிகழுமென அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிப்பதற்காக தேசிய அரசொன்று நிறுவப்படும் எனவும், அதில் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சர்வதேச ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டிலும் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்துள்ளார். எனினும், ஒரு தடவையேனும் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
இதன் காரணமாக ராசி இல்லாத ராஜாவாகவே ரணில் விக்கிரமசிங்க கருதப்படுகின்றார். எது எப்படி இருப்பினும் அரசியல் மாற்றங்களால் பிரதமர் பதவி அவரை தேடிவருவது அதிஷ்டமாகவே அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றார்.