எறும்புக்காக இப்படியா! இளம் குடும்ப பெண் செய்த செயலால் கதறும் குடும்பத்தினர்
தெலங்கானாவில், எறும்புகள் மீதான பயத்தினால் 25 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்காரெட்டி மாவட்டத்தில், திருமணமாகி 3 வயதுடைய பெண் குழந்தைக்கு தாயான மனிஷா என்பவருக்கு,சிறுவயது முதல் எறும்புகள் மீது கடுமையான பயம் எனக் கூறப்படுகிறது.

மிர்மெகோ போபியா
இந்த பயத்தை உளவியல் ஆய்வாளர்கள், மிர்மெகோ போபியா என்று அழைக்கின்றனர். இதற்காக, மனிஷா அவரது சொந்த ஊரான மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைகள் பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 4 ம் திகதி மனிஷாவின் கணவர் ஸ்ரீகாந்த் வழக்கம்போல் வேலைக்குச் சென்றவுடன், தனது வீட்டைச் சுத்தம் செய்யப்போவதாகக் கூறி அவரது குழந்தையை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாலை வேலை முடிந்து வீடுத் திரும்பிய அப்பெண்ணின் கணவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துள்ளார்.
அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் மனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மனிஷாவின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள் ஸ்ரீ, என்னால் இந்த எறும்புகளுடன் வாழ முடியாது எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், மனிஷா அவரது வீட்டைச் சுத்தம் செய்தபோது எறும்புகளைக் கண்டு பயந்து தற்கொலை செய்திருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.