ராஜபக்ஷக்களை பாதுகாக்க வந்த செல்லப்பிராணி தான் ரணில்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) என்ற நாய்க்குட்டி, ராஜபக்ஷக்களை பாதுகாக்க வந்த செல்லப்பிராணி, இதற்கு பாலூட்டி வளர்ப்பது வேறெதற்கும் அல்ல, தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகும்.
இந்தநிலையில், ரணில் நாய்க்குட்டியா அல்லது நரிக்குட்டியா என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (30-05-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா எங்களுக்கு நன்மை செய்வதாக கூறி துன்பம் தருகிறது.
தமிழ் மக்களின் காணிகளை மீட்டெடுப்பது, அரசியல் கைதிகளை விடுகிவிப்பதற்கான நடவடிக்கை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கை, வடகிழக்கில் செயற்படாது இருக்கின்ற மாகாணசபையின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை, காணாமல் போனவர்களுக்கு நீதிகளை வழங்குதவதற்கன நடவடிக்கைகளை எடுங்கள் என நரேந்திர மோடியிடம் (Narendra Modi), தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், கேட்டிருந்தால் எங்களுடைய தொப்புள் கொடி உறவு என்று இந்தியாவை சொல்லியிருப்போம்.
இன்று தமிழ் நாட்டில் ஏற்றுமதி செய்கின்ற மீன் வளங்களினால் 75% நன்மைகள் கிடைக்கின்றன. இலங்கையில் இருந்து சூறையாடுகின்ற மீன்களினால் வருமானத்தினை பெறுகிறார்கள்.
இதனை தக்க வைப்பதற்காக எமது கடல்பரப்பை கொள்ளையடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இலங்கை சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் சிக்கித் தவிக்கின்றது.
நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து மாகாணங்களையும், பல்நாட்டு அதிகாரமுள்ள நாடுகள் பயன்படுத்துகிறார்கள். இந்த நாட்டினை நாசமாகியவர்கள் இந்த அரசாங்கம்.
மக்களுக்கு நன்மை தருகின்ற அரசியல் திருத்தங்களை கொண்டுவர வேண்டும், புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த வேண்டும், மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும், மக்களுக்கான ஆட்சியினை உருவாக்க வேண்டும்.
தமிழ் மக்கள் மீது வன்மங்களை ஏவிவிட்ட, இந்த நாட்டினை சூறையாடிய ரணில் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) குடும்பம் என்ற 2 கும்பல்களையும் தோற்கடிப்பதற்கான காலம் உதயமாகி இருக்கின்றது.
எனவே இதற்காக மக்கள் அணிதிரள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க என்ற நாய்க்குட்டி, ராஜபக்ஷக்களை பாதுகாக்க வந்த செல்லப்பிராணி, இதற்கு பாலூட்டி வளர்ப்பது வேறெதற்கும் அல்ல, தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகும்.
எனவே, ரணில் நாய்க்குட்டியா அல்லது நரிக்குட்டியா என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 21 ஆவது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் அதன் அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும், அதன் பின்பு ராஜபக்ஷக்கள் போடுகின்ற தளத்திற்கு ரணில் ஆடமுடியாமல் போய்விடும்.
இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்து, நாடாளுமன்றத்தின் உள்ளேயும் ராஜபக்ஷக்கள் நுழைய முடியாது. – என்றார்