காய்ச்சலால் பலியான 9 வயது மகள் ; வைத்தியசாலையில் தந்தை செய்த செயலால் அதிர்ச்சி
அமீபா காய்ச்சலால் மகள் உயிரிழந்ததையடுத்து தந்தையொருவர் மருத்துவரை வாளால் வெட்டியுள்ள சம்பவம் கேரளாவின் கோழிக்கோட்டில் பதிவாகியுள்ளது.
கோழிக்கோட்டு, தாமரசேரி அரச மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
தந்தை கைது
மருத்துவரை வெட்டிக் காயப்படுத்தியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, 9 வயது சிறுமியொருவரே அமீபா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள் உரிய முறையில் தனது மகளுக்கு சிகிச்சையளிக்கவில்லை என அவரது தந்தை குற்றஞ்சாட்டினார்.
மகளின் இழப்பைத் தாங்க முடியாத தந்தை மருத்துவரை சரமாரியாகத் தாக்கி வாளாலும் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சந்தேகநபரான உயிரிழந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.