இலங்கையில் பலமான குழுவிற்கு இந்தியா அறிவித்த தகவல்! அதிர்ச்சியில் ரணில்
ஜனாதிபதி பதவியை கோட்டாபய ராகபக்ஷ (Gotabaya Rajapaksa) இராஜினாமா செய்தால், ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக பதவியேற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கத்தின் பலமான குழுவிற்கு இந்தியா அறிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிக்கு நாடாளுமன்ற அதிகாரம் உள்ளதால், ஜனாதிபதி பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேறு ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், பொதுத்தேர்தலில் ஆணை கிடைக்காத திரு.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை ஜனநாயக கோட்பாடுகளின்படி ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.