யாழில் SPB பாலசுப்பிரமணியம் பாடலை கேட்டு அசந்து போன ரணில்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், SPB பாலசுப்பிரமணியம் பாடிய தமிழ் பாடலை இளைஞர் ஒருவரை பாட சொல்லி கேட்டு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் நேற்றுமுன்தினம் (2024.05.24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தென்னிந்தியாவின் மறைந்த பாடகர் பாலசுப்ரமணியத்தின் பாடல் ஒன்றை பாடுவதற்கு அவையிலிருந்த இளைஞர்களிடையே கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய பாடல் பாடப்பட்டதுடன் பிரதேச இளைஞர்களின் திறன் மற்றும் கலாசாரத் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.