இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது: இராமேஸ்வர மீனவர்கள் எடுத்துள்ள முடிவு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கடந்த (16.09.2023) ஆம் திகதி முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்திய இராமேஸ்வரம் மீனவர்கள் தமது படகுகளை கரையில் நிறுத்தி இவ் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் 17 இந்திய மீனவர்களை கடந்த (13.09.2023) ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், எஞ்சிய 9 பேர் புதுக்கோட்டை மீனவர்கள் ஆவர்.
குறித்த மீனவர்கள் வருகைத் தந்த 5 படகுகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த படகுகளை விடுவிக்குமாறு இராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரை இலங்கை கடற்படையினர் இவ்வாண்டில் 110 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 7 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும் அவர்களுடைய படகுகள் விடுவிக்கப்படவில்லை என இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.