ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: கடும் கண்டனம் தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்!
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், சம்பவம் தொடர்பில் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழப்பு ஏற்ப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அவர் தமது டுவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
[PC4G7H ]
எல்லா வகையிலும் வன்முறையை தாம் கண்டிப்பதாகவும், கட்டுபாடுகள் அவசியம். அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெற்காசியாவுக்கான சர்வதேச மன்னிப்புச் சபைக் கிளையும் இந்த சம்பவத்தைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.