அவள் நானனல்ல; NPP பெண் எம்பி எச்சரிக்கை!
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தோன்றுவது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் தான் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தத் திருமண நிகழ்வில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், அந்த நிகழ்வுக்குத் தான் அழைக்கப்பட்ட விருந்தினர் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், குறித்த புகைப்படம் ஏதேனும் ஒரு வகையில் திருத்தப்பட்டதாகவோ அல்லது திரிபு படுத்தப்பட்டதாகவோ இருந்தால், அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.