அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவு ; பொலன்னறுவையில் இன்று ஜனாதிபதி பங்கேற்கும் பேரணி
பொலன்னறுவையில் இன்று (12) நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
"மக்களின் ஆட்சி - ஈராண்டு பலம், அனைவருக்கும் முன்னேற்றம்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி, இன்று மாலை 4 மணிக்குத் ஆரம்பமாகவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் பேரணிகளில் இந்தப் பேரணியும் ஒன்றாகும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையை மையமாகக் கொண்டு பொலன்னறுவை பேரணி நடத்தப்படவுள்ளதாக இதற்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பரப்படுத்தல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அண்மைய நாட்களில் நடைபெற்ற பேரணிகளில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.