பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ரக்க்ஷிதா; அதிர்ச்சியில் ரசிகர்கள்!(Video)
கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, ஜனவரியில் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழக ரசிகர்களை மட்டுமல்லாது இலங்கை தமிழர்ளையும் பிக்பாஸ் நிகழ்ச்சி கவர்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, தர்சனை தொடர்ந்து இந்த சீசனில் யாழ்ப்பாணத்தை சேர்த ஜனனி கலந்துகொண்டிருந்த நிலையில் கடந்தவாரம் ஜனனி பிக்பாஸ் வீட்டிலிந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் விட்டில் இன்று வெளியான ப்ரமோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினர் குறித்த தகவல்களை கூறுகையில், தனது தாயார் குறித்து பேசிய ரக்க்ஷிதா கதறியழுத காணொளி வெளியாகி ரசிகர்களை கலங்கவைத்துள்ளது.
ரக்ஷிதா திருமண முறிவு
ரக்ஷிதாவுக்கும், சீரியல் நடிகர் தினேஷிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ரக்ஷிதா அமைதியாக இருந்தாலும் காரியங்களை சாதுர்யமாக செய்து வருகிறார்.
கொடுக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாட்டை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் போட்டி சூடு பிடித்துள்ளது. இந்த வார டாஸ்காக மழலையர் மற்றும் உயர் கல்வி குறித்தான பஃர்ன் விளையாட்டாக சென்று கொண்டிருக்கிறது.