தேரரின் வங்கி கணக்கில் மோசடி; பொலிஸார் அதிரடி
தேரர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடியான முறையில் பணத்தை பெற்றுக் கொண்ட நான்கு சந்தேக நபர்கள் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை - பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் உள்ள தேரரின் அபணமே இவ்வாறு மோசடியாக பெறப்பட்டுள்ளது.
தேரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கைதுசெய்யப்பட்டவர்கள் கம்பஹா, ஜா -எல , ஏக்கல மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 33, 34, 45மற்றும் 46 வயதுடையவர்கள் ஆவர்.
குறித்த தேரர் பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் வங்கி கணக்கு ஒன்றை திறந்து பணத்தை சேமித்து வந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த தேரரின் தேசிய அடையாள அட்டை காணாமல்போயுள்ளது.
இதனையடுத்து தேரரின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல்போனதனையடுத்து பாதிக்கப்பட்ட தேரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தேரரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்ட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் ஏ.ரி.எம் இயந்திரத்தில் தேரரின் வங்கி கணக்கில் இருந்து தங்களது வங்கி கணக்கிற்கு மோசடியான முறையில் பணத்தை பரிமாற்றி அதனை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.