தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இவர்களுக்கு பணம் பெருகும், தொழில் வளரும்
வேத நாட்காட்டியின் படி, ஏப்ரல் 14 ஆம் திகதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அதுவும் புதிய தமிழ் ஆண்டான பராபவ ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் செல்வத்தின் காரணியான சுக்கிரன் வருணனுடன் சேர்ந்து அர்த்த கேந்திர ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
இப்போது தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் மூலம் உருவாகும் அர்த்த கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்: நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதைம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கும்பம்: தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறக்கூடும். வேலையில் மாற்றங்களை காண்பதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
ரிஷபம்: மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். முக்கியமாக சுக்கிரனின் அருளால் பண பிரச்சனைகள் தீரும். கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். வியாபாரிகள் சற்று கவனமாக இருந்தால், நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் சோம்பலைத் தவிர்க்க வேண்டும்.