சிங்கப்பூரில் சிக்கிய இலங்கை இளைஞர் ; விதி மீறினால் விடுபட முடியாது
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடிவரவு குற்றவாளிகளைக் கண்டறியும் நோக்கில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது.
அதிரடி நடவடிக்கை
கடந்த வியாழக்கிழமை ( 08) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் போது, உரிய விசா இன்றி தங்கியிருந்த 27 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின்படி, குறித்த நபர் கடந்த 2025 ஜூன் 28 ஆம் திகதியுடன் காலாவதியான தனது சமூக விஜயக் கடவுச்சீட்டின் (Social Visit Pass) பின்னர், சுமார் ஒன்பது மாதங்களாக சட்டவிரோதமாகச் சிங்கப்பூரில் தங்கியிருந்துள்ளார்.
நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் அடையாள உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகச் சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.