வயல்வெளியில் கிடைத்த விமான வடிவ மர்ம பலூன் ; மக்கள் அதிர்ச்சி
இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில், பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வானூர்தி போன்ற வடிவிலான மர்ம பலூன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வயல்வெளியில் இந்த பலூன் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த பலூனைக் கைப்பற்றி தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
எல்லையோரப் பகுதிகளில் இருந்து இத்தகைய பலூன்கள் காற்று வீசும் திசையினால் இந்தியாவுக்குள் வருவது அவ்வப்போது நிகழ்ந்தாலும், தற்போதைய சர்வதேசச் சூழலில் இது உளவு வேலைகளுக்காக அனுப்பப்பட்டதா அல்லது திசைமாறி வந்ததா என்ற கோணத்தில் பாதுகாப்புப் படையினர் ஆராய்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.