நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள ரயில்வே திணைக்களம்!
ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி அந்த சங்கத்தினால் பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் இடம்பெறாது என்றும், ரயிலுக்காக காத்திருக்க வேண்டாம் எனவும் ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் கூறுகின்றது.
நிலையப் பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான எந்த ஏற்பாட்டினையும் அரசாங்கம் செய்யவில்லை என்று அந்த சங்கம் குறிப்பிடுகிறது.
இந்த நிலைமையினால் ரயிலில் பயணிப்பவர்களுக்கு கடும் பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.