உலகப் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்திற்கு வந்த சோதனை!
இந்து கடவுளாம் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தற்போது அங்கு வாழும் இஸ்லாமியகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் என்றாலே அழகும், அறிவும் சேர்ந்த உருவம் நம் கண் முன் வந்து நிற்கும். முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
ஆறுபடை வீடுகளில் முதல் வீடு
ஆறுபடை வீடுகளைக் கொண்ட முருகப் பெருனுக்கு அதன் ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது.
- ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகும்.
- முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்.
- மூன்றாம் படைவீடான பழநி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.
- நான்காவது படைவீடாக சுவாமி மலை உள்ளது.
- ஐந்தாவது படைவீடாக திருத்தணியும் ,
- ஆறாவது படைவீடாக சுவாமிமலையும் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது.
இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றவர்கள் அங்கு அசைவ உணவு உண்டதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.
144 தடை உத்தரவு
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் இன்று (4ம் தேதி) அறவழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் வெளியூர் நபர்களை அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோப்பூர், தனக்கன்குளம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் முருக்கப் பெருமானுக்கு மிகவும் உகந்த தைப்பூச நாள் பெப்ரவரி 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் ஆலய சர்ச்சை இந்துக்கள் மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது.