ரஷ்ய துருப்புக்களிடம் கண்ணீர் மல்க உக்ரைனியர்கள் எழுப்பிய கேள்வி!
உக்ரைன் மீது ரஷ்யா 50-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகின்றனர். உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் போரால் இருதரப்பிலும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில் உக்ரைனின் மரியுபோல் நகரம் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும் ரஷ்ய வெடிகுண்டுகளுக்கு இரையாகியுள்ளன.
இதிலும் குறிப்பாக 10 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்ய துருப்புக்கள் எதற்காக பொதுமக்களை கொல்கின்றனர் என கவலையுடன் உக்ரைனியர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரஷ்ய துருப்புக்கள் எதற்காக எங்களைக் கொல்கின்றனர், நாங்கள் என்ன செய்தோம்? உங்களால் எங்களது வாழ்க்கையை இழந்து வருகிறோம் என கண்ணீர் மல்க உக்ரைனியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.