திடீரென இருளில் மூழ்கிய புத்தளம்! தவிப்பில் அப்பகுதி மக்கள்
புத்தளம் பகுதியில் இன்று மாலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று (27-03-2022) இரவு முதல் இடைக்கிடையே இடியுடன் மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் இன்று மாலை (28-03-2022) இடி மின்னலுடன் மழை பெய்த போது, புத்தளம் கல்லடி பகுதியிலுள்ள பாரிய மின் பிறப்பாக்கி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி பழுதடைந்துள்ளதனாலேயே இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் அலுவலத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், மதுரங்குளி , பாலாவி மறரறும் தில்லையடி பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இருப்பினும், பழுதடைந்துள்ள மின் பிறப்பாக்கியை திருத்தம் செய்ய பொறியியல் குழுவொன்று பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.