புடின் விரைவில் இறந்துவிடுவார் ;வெளியான பரபரப்பு தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் "விரைவில் இறந்துவிடுவார்" என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) இதனைத் தெரிவித்துள்ளார். கீவ் படைகள் ரஷ்யாவின் பல பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றன.
கடுமையாக விமர்சித்த யுக்ரேன் ஜனாதிபதி
ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலையைக் குறித்து யுக்ரேன் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்ததுடன், புடினின் உடல் நிலை நீண்ட நாட்களாக மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் புடின் இரண்டு வாரங்களுக்கு பொது இடங்களில் தோன்றவில்லை, இதனால் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதேவேளை, அவரின் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றிருக்கலாம் என்ற செய்திகளும் வலுப்பெற்றுள்ளன. அதேவேளை 2014, 2020, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பலமுறை அவருக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறப்பட்டது.
அவசர மருத்துவ உதவிக்காக அவருடன் எப்போதும் மருத்துவர்கள் குழுவொன்று பயணிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரைவில் இறந்து விடுவார் என யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கருத்து வெளியிட்டுள்ளார்.