முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற குடும்பஸ்தரை காப்பாற்றிய பொலிஸார்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விரைவான நடவடிக்கையினால் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் (17-01-2025) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு , விசுவமடு, ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிகு இடையில் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்றிரவு 7 மணியளவில் கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க வீட்டு அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.
இதனை அவதானித்த மனைவி அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் வீட்டு அறைக்கதவினை உடைத்து குடும்பஸ்தரை மீட்டெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட குடும்பஸ்தர் உடையார்கட்டு மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் விசுவமடு ரெட்பானா பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய 4பிள்ளைகளின் தந்தையே இந்த தவறான முடிவினை எடுத்துள்ளார்.
இருப்பினும், புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விரைவான நடவடிக்கையினால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது பாராட்டத்தக்க விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.