பெண்ணின் கூந்தலை வெட்டி தண்டனை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் கூந்தலை வெட்டிபெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணமூல் கட்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரின் தலைமுடியை ஆண் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி அகற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது.
பாஜக கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பில் பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்,
HORRIFIC VISUALS from Domjur, Howrah!
— Amit Malviya (@amitmalviya) July 19, 2024
After #Sandeshkhali, Chopra, Ariadaha, Kolkata, now it is Howrah’s turn… Goons named Isha Lashkar, Abul Hossain Lashkar, Sayem Lashkar, Makbul Ali, Israil Lashkar, Arbaz Lashkar and Mehebullah Midde, all close to the TMC, were found… pic.twitter.com/ymsaqhXJm4
இம்முறை ஹவுராவின் டோம்ஜூரில் இச்சம்பவம் நடந்துள்ளது. டோம்ஜூர் தொலைதூரப் பகுதி அல்ல. ஹவுரா நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி. இந்த சம்பவம் ஒரு தனி நிகழ்வு அல்ல, கூச் பெஹார் முதல் சோப்ரா, அரியதாஹா மற்றும் டோம்ஜூர் வரை இந்த துயரம் தொடர்கிறது.
இந்த கொடூர செயலை செய்த இஷாலஷ்கர், அப்துல் ஹுசைன் லஷ்கர்உள்ளிட்ட அனைவரும் திரிணமூல் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீரழிந்து மாநிலம் முழுவதும் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறதாகவும் அவர் கூறி உள்ளார்.
மம்தா பானர்ஜி மீது காட்டம்
அதேசமயம் பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர்அமித் மாளவியாவும் இந்த வீடியோவை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவர் தனதுபதிவில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க, மாநிலத்தை பழமைவாத பாதையில் பின்னோக்கி தள்ளியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
அதேவேளை அமித் மாளவியா இம்மாத தொடக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ராவின் கூட்டாளி ஜெயந்தா சிங் மற்றும் அவரது கும்பலால் பொதுஇடத்தில் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்துகொண்டார்.