அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்கள் தாயகம் அனுப்பப்பட்டது
ஈரானிய மாலுமிகள் 84 பேரின் உடலங்களை ஏற்றிச் சென்ற விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
ஈரானிய மாலுமிகளின் உடலங்களை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் விமானம் இன்று (13) இரவு 9.29 மணியளவில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கடந்த மார்ச் 4 ஆம் திகதி இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் உயிரிழந்தவர்களின் உடலங்களே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த உடலங்கள் காலி பகுதியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் மத்தள விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
விமானத்தின் சரக்குக் கிடங்கில் 84 சவப்பெட்டிகளையும் வைக்க இடவசதி இல்லாததால், சில சவப்பெட்டிகள் விமானத்தின் பயணிகளின் இருக்கை அறையிலும் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.