யாழில் தனி நபரிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்றுமாறு பெற்றோர் கோரிக்கை!

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Jaffna Crime
By Sulokshi Oct 09, 2025 12:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபரொருவர், தமது பிள்ளைகளை அந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தி, பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக பெற்றோர் கவலை வெலியிட்டுள்ளனர்.

அந்த நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, பிரதேச வாழ் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ். அரசடி பிரதேச மக்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

யாழில் தனி நபரிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்றுமாறு பெற்றோர் கோரிக்கை! | Jaffna Parents Request Protect Children Crime

சமூகவிரோத குற்றச் செயல்

இந்த முறைப்பாட்டை இன்று (9) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளித்த அரசடி பிரதேச மக்கள், ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர் ஆவார்.

யாழில் பிரபல பாடசாலையில் மாணவிகள் மீது ஆசிரியர் அங்கசேட்டை; கண்டுகொள்ளாத நிர்வாகம்

யாழில் பிரபல பாடசாலையில் மாணவிகள் மீது ஆசிரியர் அங்கசேட்டை; கண்டுகொள்ளாத நிர்வாகம்

எமது அரசடி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இவரது பின்னணியில்தான் நடந்து வருகிறது. இவை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நாங்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறோம். இந்நிலையில், அண்மையில் அரசடியில் குறித்த சட்டவிரோத நபரால் வெளியூரில் இருந்து சிலர் வரவழைக்கப்பட்டு, வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடத்தப்பட்டது.

யாழில் இப்படியும் செய்வார்களா? அரங்கேற்றியது யார் ? மக்கள் வேதனை

யாழில் இப்படியும் செய்வார்களா? அரங்கேற்றியது யார் ? மக்கள் வேதனை

இதனால் எமது பிள்ளைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் இறங்கினர். இதன்போது ஒருவர் காயங்களுக்குள்ளானார். அதைக் காரணமாகக் கொண்டு, எமது ஏழு பிள்ளைகளை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால், அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.

எமது பிள்ளைகள் மீது தேவையற்ற வகையில் சோடிக்கப்பட்ட வழக்குகள் பொலிஸாரால் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே இன்று மனித உரிமைகள் காரியாலயத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

13 வங்கிக் கணக்குகள் முடக்கம்; பெக்கோ சமனின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

13 வங்கிக் கணக்குகள் முடக்கம்; பெக்கோ சமனின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US