இந்த உணவுகள் எல்லாம் உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்குமா?
உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கும் ஆரோக்கியமான உணவுகளை பெரும்பாலானோர் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, உடனடி தயார் செய்யப்படும் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகிறார்கள்.
இந்த போக்கை மாற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கசப்பு மற்றும் புளிப்பு உணவுகள் எவையென நாம் இங்கு பார்க்கலாம்.
எலுமிச்சை
எலுமிச்சையில் சுமார் 35 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் தினசரி உணவில் தேவைப்படும் வைட்டமின் சி-ன் பாதி அளவாகும். வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது செல் சேதத்தை தடுக்கிறது. வைட்டமின் சி உங்கள் சருமத்திற்கு கொலாஜனை உருவாக்க உதவுகிறது மற்றும் உடல் இரும்புச் சத்தை உறிஞ்ச உதவுகிறது. அத்துடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்
அமிலத்தன்மை கொண்ட ஆப்பிள் சைடர் வினிகர், செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு, ரத்த சர்க்கரையையும் சீராக்குகிறது.
பரட்டைக்கீரை
முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த இந்த பரட்டைக்கீரை இரும்பு, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது.
கிம்ச்சி
கிம்ச்சி ஒரு புளிப்பு மற்றும் காரமான கொரிய உணவாகும். இது ஆரோக்கியமான குடல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவும் புரோபயாடிக்குகளால் நிரம்பியுள்ளன. கிம்ச்சியில் இருக்கும் ப்ரீபயாடிக்குகள் நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை வளர்க்கின்றன. அத்துடன், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
திராட்சை
திராட்சை ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.