ஹேமசிறியை தொடர்ந்து பூஜிதவும் விடுதலை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில், அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் தின தாக்குதல் வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.