மின் கட்டணத்தை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை
மின் கட்டணத்தை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்யும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் கட்டண திருத்தம்
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூன்றாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் எழுத்துமூலமாக எதிர்வரும் 18 ஆம் திகதி வரை முன்வைக்க முடியும்.
இந்த விடயம் தொடர்பான எழுத்துமூலமான கருத்துகளை, மின்னஞ்சல், Fax, Facebook அல்லது கடிதம் ஊடாக முன்வைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் வாய்மூல கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஒக்டோபர் 18 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.