இனி தமிழன் மீது கைவைத்தால் நாட்டிலே போராட்டம் வெடிக்கும் ; கொதித்தெழுந்த எம்.பி சாணக்கியன்
முல்லைத்தீவில் தமிழ் இளைஞன் ராணுவத்தினரினால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நடைபெறவுள்ள கதவடைப்பு (ஹர்த்தால்) போராட்டத்திற்கு அனைத்து மக்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் 2025 ஆம் ஆண்டிலும் தமிழ் இளைஞர்களை அடித்து கொலை செய்யும் அளவிற்கு இருக்கின்றது என சாணக்கியன் கண்டனம் வெளியிட்டார்.
முல்லைத்தீவில் இரு தினங்ளின் முன்னர் இளைஞர்கள் சிலரை இராணுவ முகாமிறு வருமாறு அழைப்பு விடுத்து அங்கு சென்ற இளைஞர்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.
இதில் தாக்குதலுக்குள்ளான இளைஞன் உயிரிழந்த நிலையில் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பில் ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசியல்வாதிகள் உட்பட பலரும் கண்டனஙன்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இளைஞனின் மரணத்தை கண்டித்து, வடக்கு கிழக்கு மாகாணத்தில் வரும் 15 ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.