மஹிந்தவின் நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்ட ரணில்
அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று மகிந்தராஜபக்க்ஷ தரப்பு ஆதரவாளர்களால் முன்னெடுக்கபப்டும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் இருவரும் இன்று காலை 8.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-121 இல் இந்தியாவுக்கு புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க வினரை இன்றைய அரசுக்கு எதிரான நுகேகொட பேரணியில் கலந்து கொள்ளக் கூறிவிட்டு, மனைவியுடன் ரணில் சென்றுள்ளார்.
நுகேகொட பேரணியில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ரணில் பேரணியில் கலந்துகொள்வார் என ஏற்பட்டாளர்கள் பெருதும் எதிபார்த்த நிலையில், ரணில் இந்தியாவுக்கு கம்பி நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.