பிக்குவால் துஸ்பிரயோகத்திற்குள்ளான அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினர், ஜனாதிபதி , நீதி அமைச்சர், சட்டமா அதிபர், மகளிர் விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக மகஜரை கையளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை பாதிக்கப்பட்ட அனுராதபுர சிறுமிக்கு நீதிகோரி இன்று மட்டக்களப்பிலும் பெண்கள் போராட்டத்தை முன்னெடஉடுத்தமை குறிப்பிடத்தக்கது,