இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம் (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 377,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,350 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் தங்க விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.