பிரித்தானியாவில் நீதிபதி சரவணராஜாவுக்காக திரண்ட புலம்பெயர் தமிழர்கள் !
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜாவுக்கு நீதி வேண்டி தாயகத்திலும் , புலம் பெயர் நாடுகளிலும் வாழும் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவருகின்றன.
அந்த வகையில் நேற்றையதினம் பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீ லங்கா உயர்ஸ்தானிகராலய்த்தின் முன் Freedom Hunters அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் புலம் பெயர் பெரியோர், இளையோர், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் 'நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும்', 'குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்', 'சர்வதேசம் தலையிட வேண்டும்' போன்ற கோசங்களும் எழுப்பினர்.