யாழில் சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்று தென்னிலங்கை பெண்கள் விபச்சாரம்!
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் சொகுசு வீட்டினை கட்டி , அதனை கிளிநொச்சியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த ஒருவருக்கு வாடகை
குறித்த வீட்டிற்கு பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து , சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் , இன்றைய தினம் சனிக்கிழமை வீட்டினை முற்றுகையிட்டனர்.
இதன்போது வீட்டினுள் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது தென்னிலங்கையில் இருந்து விபச்சார நடவடிக்கைக்காக அழைத்து வரப்பட்டிருந்த மூன்று பெண்கள் மற்றும் , வீட்டினை வாடகைக்கு பெற்றநபர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.