பிசிஆர் பரிசோதனையின் தரம் குறித்து தொடரப்பட்ட வழக்கு
தனியார் வைத்திசாலையில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் தரம் குறித்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமாற்றத்தில் அடைப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இராஜகிரிய சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளான கட்டுநாயக்க விமான நிலையம், வான் சேவைகள் நிறுவனம் மற்றும் அதன் தலைவர், சுகாதார அமைச்சின் செயலாளர் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரது பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 8ம் திகதி தனது மனைவியுடன் டுபாய் செல்வதற்காக 2 தனியார் வைத்தியசாலைகளில் நான்கு முறை பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டபொது பரிசோதனைகளின் ஒன்றுக்கு ஒன்று முரணான பெறுபேற்றை வெளிப்படுத்தியதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தான் தனக்கு தேவையற்ற செலவீனம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தனது வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தை சுட்டிக்காட்டிய மனுதாரர் அதற்காக 100 இலட்சம் ரூபா நட்டஈட்டை அறிவிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.