குருந்தி தொல்லியல் தள விவகாரம்: தீர்வு காண பல முன்மொழிவுகளை முன்வைப்பு!
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பௌத்த விகாரை, இந்து கோவில் மற்றும் மக்கள் பாவணைக்காக முல்லைத்தீவு குருந்தி தொல்லியல் துறைக்கு வெளியில் மூன்று ஏக்கரை ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உபுல் மகேந்திர ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் போது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு குருந்தி தொல்பொருள் தளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
குருந்தி ரஜமஹா விகாரை பௌத்த மத இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதி குருந்தி தொல்லியல் பகுதிக்கு சொந்தமானது என்பதனால் 229 ஏக்கர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பகுதியை மீள உறுதிப்படுத்த நிபுணர் குழுவொன்று பரிசோதனைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.