திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடை உத்தரவு
திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - பெரியவெளி சந்தியில் நாளைய தினம் (03.09.2023) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன முறுகலை ஏற்படுத்தும் என்றதன் அடிப்படையில் நிலாவெளி பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயல்படும் ஏழு பேருக்கும் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.