இளைஞரின் உயிரை பறித்த தனியார் பேருந்து ; விசாரணைகள் தீவிரம்
கட்டுவன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலஸ்முல்ல - மித்தெனிய வீதியின் மஹருப்ப பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மித்தெனிய நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கட்டுவன பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுவன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை - அம்பேபுஸ்ஸ வீதியின் 174ஆம் மைல்கல் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டதாக தெரிவித்த தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.