பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பொலித்தீன் சாப்பிட வைத்த அதிபருக்கு நேர்ந்த கதி!
பலவந்தமாக பாடசாலை மாணவர்களை பொலித்தீன் சாப்பிட வைத்த சம்பவத்தில் கைதான அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்களே இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் நேற்றைய தினம் (28-11-2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (29-11-2023) நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 47 வயதுடைய அதிபர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.