கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் செய்த பிரதமர்
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை, கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் வரவேற்றார்.
தொடர்ந்து கலாசாலையில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட நூல் நிலையத்தை பிரதமர் நாடாவெட்டி திறந்து வைத்தார். இதன்போது கல்லூரி சமூகத்தால் பிரதமருக்கு நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் ந.வேதநாயகன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வ.பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கலாசாலையின் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        