பிரதமர் - வெளிவிவகார அமைச்சர் வெளிநாடு செல்ல தீர்மானம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இத்தாலிக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி அவர்கள் வரும் 09ஆம் திகதி இந்த விஜயத்தை அவர்கள் இருவரும் மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றினால் இரண்டு வருடமாக இராஜதந்திர விஜயங்கள் இடம்பெறவில்லை .
இந்நிலையில் இத்தாலியில் எதிர்வரும் வாரத்தில் நடக்கவுள்ள ஐரோப்பிய மாநாடொன்றில் அவர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை அந்த மாநாட்டின் ஆரம்ப உரையை பிரதமர் மஹிந்த ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விஜயத்தின்போது பிரதமர் மற்றும் அமைச்சர் பீரிஸ் வத்திக்கானுக்கும் செல்வார்கள் என்றும் அலரிமாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.