அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்; அதிரடி நடவடிக்கை
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், 5 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தமிழக அமைச்சர் ரமேஷ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாதாரண உடையில் முக கவசம் அணிந்து ரகசியமாக திடீர் ஆய்வு செய்தார்.

கையில் பணம் இல்லை என சொல்லியதால் ஜிபேயில்...
கோவில் வளாகம், அன்னதானம் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் பக்தருடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அன்னதான உணவின் தரம் குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் தரிசன வரிசையில் முக கவசம் அணிந்து ரகசிய ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய 4,000 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் கையில் பணம் இல்லை என்று சொல்லியதால் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அந்த அர்ச்சகர் கேட்டு பெற்றுள்ளார்.
இந்த தகவல் தீயாக பரவ, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விரைவு தரிசனத்திற்காக பணம் பெற்ற அரச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அர்ச்சக்கருடன் சேர்ந்து முறைகெட்டிற்கு உடந்தையாக இருந்த 2 பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல, முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.