வேஷ்டி சட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்; வைரலாகும் காணொளி!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வேஷ்டி சட்டையில் வந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆன பின்னர் , வேஷ்டி சட்டையில் , அவரது மேலாளரின் கிரகப்பிரவேசத்திற்கு சென்றுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மேலாளராக கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ஜெகதீஸ் பழனிசாமி. இவர் , முதலமைச்சர் விஜய்யின் மேலாளராக மட்டுமின்றி ரூட் (Route) எனும் பிரபல மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனராகவும் இவர் அறியப்படுகிறார்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ் புதிதாக வீடு கட்டியுள்ளார்.
Video 2 : @TVKVijayHQ At Thalamai Seyalagam !! https://t.co/yyAfmWOTbR pic.twitter.com/cPmxvHymY7
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 29, 2026
இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று (29) நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அங்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.