சதொச விற்பனை நிலையங்களில் உணவு பொருட்களின் விலை குறைப்பு
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய சதொச விற்பனை நிலையங்களில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
நிலக்கடலை கிலோ ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 995 ரூபாவாகும். சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 300 ரூபாவாகும். உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 180 ரூபாவாகும். சிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 765 ரூபாவாகும். நெத்தலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 940 ரூபாவாகும். பாஸ்மதி அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 645 ரூபாவாகும். பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 230 ரூபாவாகும். பருப்பின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 288 ரூபாவாகும். வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 240 ரூபாவாகும்