சுவிட்சலாந்தில் பிரபல இந்து ஆலயத்தில் திடீர் தீ விபத்து; பக்தர்கள் கவலை
சுவிட்சலாந்தில் அமைந்துள்ள தூண் (thun) ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கட்டடத்தில் கூரைப்பகுதியில் எதிர்பாராதவிதமா ஏற்பட்ட தீ விபத்தினால் ஆலயத்தின் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதாக 2சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தம் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுவிட்சர்லாந்தில் கடும் குளிர்காலம் நிலவும் இக்காலத்தில் கரிப்புகை மண்டலமாக ஆலயச்சுற்றாடல் தென்பட்டதாக கூறப்படுகின்றது.
உயிராபத்தோ காயங்களோ இல்லை
பேர்ண் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்களால் விரைந்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவத்தில் மக்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை கூறப்படுகின்றது. தீ விபத்தை அடுத்து முகட்டுமாடி குடியிருப்புகளில் இருந்தவர்கள் இச்சம்பவத்தில் பாதுகாப்பாக தீயணைப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து மற்றும் சொத்து இழப்புக்கான விசாரணை இடம்பெற்று வருவதாக பேர்ண் காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.