தங்கம் விலை குறைய வேண்டும் ; வாழைப்பழத்தில் விநோத வேண்டுதல் ! இணையத்தில் வைரல்
இந்தியாவில் தங்கம் விலை குறைய வேண்டும் என பக்தர் ஒருவர் வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலகில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு, தினமும் வரலாறு காணாத உச்சம் என்ற பட்டத்துடனேயே பயணித்து வந்தது.

வரலாறு காணாத உச்சம்
இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்து கடந்த மாதம் 29 ஆம் திகதி ஒரு சவரன் ரூபா 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது.
இந்த விலை உயர்வு மேலும் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சிம்னாலி துர்க்கம்மா தேவி தேர் திருவிழாவின் போது, பக்தர் ஒருவர் 'ஏழைகளும் வாங்கும் அளவிற்கு தங்கம் விலை குறைய வேண்டும்' என வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்த புகைப்படம் வைரலானது.
அதெவேளை தற்போது தங்கம் விலை சடுதியக குறைந்துவரும் நிலையில், வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.